நீ.. நான்.. நாம்..
22 December 2010
பேரொளியும் பேரமைதியும்
தூரத்தில் பிரகாசிக்கிறது ஒரு பேரொளி
வழியெங்கும் நிறைந்திருக்கும் ஒரு பேரமைதி
இவை ரெண்டும்
என்னை விழுங்காமல் இருக்க
கையோடு சுமந்து திரிகிறேன்
"Angry bird" உம் "White Noise" உம்.
01 May 2010
பேருந்து பயணம்
பேருந்து பயணத்தில்
அருகில் அமர்ந்திருக்கும்
பெண்ணின் மடியில்
குழந்தையாய் நீ..
என் நிறுத்தத்தில்
பறித்து கொண்டு இறங்கிவிடலாமா
என்று பைத்தியகாரதனமாய்
யோசிக்கிறது இந்த மனசு ..
18 January 2010
தோல்வி ..
தெருவோரத்தில்
பொம்மையை
கட்டிபிடித்துகொண்டு
தூங்கும் பைத்தியக்காரிக்கு
தெரியாது
நான் அவளிடம்
தோற்று விட்டேன் என்று..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)